பெண்களும் அரசியலும் : குட்டி ரேவதி

27.05.2011 வெள்ளிக்கிழமை
பிரித்தானிய நேரம் மாலை 06.00 முதல் 08.30 வரை
இந்திய-இலங்கை நேரம் இரவு 10.30 முதல் 01.00 மணிவரை

பெண்களும் அரசியலும் :
கனிமொழி எனும் ஆளுமையை முன்வைத்து ஒரு உரையாடல்;

கனிமொழி எனும் ஆளுமையின் இன்றைய நிலையை நிலவி வரும் ஆண்மைய அரசியல் நிலைபாட்டில் இருந்து விளக்க முடியாது. கனிமொழி இயல்பில் கவிஞர். மனித உரிமை அரசியலிலும் பன்முகக் கருத்து வெளிப்பாட்டிலும் ஈடுபாடு காட்டியவர். கடந்த பத்தாண்டுகளில் அவரை அறிந்திராத தமிழக இலக்கியவாதிகள் என எவருமில்லை. நிலவும் தமிழக திராவிட அரசியல் ஊழலை நிறுவனமயமாக்கிய ஒரு நச்சுச் சுழல். இது குறித்த விமர்சன உணர்வுடன் கனிமொழி இருக்கவில்லை என்பதற்கான சான்றாகவே அவரது இந்த வீழ்ச்சி அமைகிறது. இது குறித்து தமிழகத்தின் பெண்ணியலாளர்கள் உரையாடுகிறார்கள்.

உரையாடுவோர்

மாலதி மைத்ரி தமிழகத்தின் முக்கியமான கவிஞர். தமிழ் பெண் கவிமொழியை உருவாக்கிய பெண்ணிய எழுத்தாளர். அணங்கு எனும் பெண்ணிய சஞ்சிகையின் ஆசிரியர். புதுச்சேரியில் வாழும் இவருடைய மூன்று கவிதைத் தொகுதிகள் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. சமகால அரசியல் குறித்த விமர்சனக் கட்டுரைளையும் எழுதி வருகிறார்.

குட்டி ரேவதி தமிழகத்தின் முக்கியமான பெண்கவிஞர். பனிக்குடம் பெண்ணிய சஞ்சிகையின் ஆசிரியர். இது வரையிலும் நான்கு கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கும் இவருடைய முழு கவிதைகளும் அடையாளம் பதிப்பகத்திலிருந்து வெளியாகவிருக்கிறது. சமகால அரசியல் விமர்சனக் கட்டுரைகளும் எழுதி வருகிறார்.

ப்ரியா தம்பி ஊடகவியலாளர் மற்றும் பெண்ணியலாளர். கூர்மையான அரசியல் விமர்சனங்களையும், விவாதக் கட்டுரைளையும் எழுதி வருகிறார். கனிமொழி பிரச்சினை குறித்து இவர் குமுதத்தில் எழுதிய கட்டுரை இப்பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்களையும் பேசுகிற முக்கியமான கட்டுரை.

நிகழ்ச்சித் தயாரிப்பு
குருபரன்-யமுனா ராஜேந்திரன்

Share and Enjoy:
 • Print
 • Digg
 • Sphinn
 • del.icio.us
 • Facebook
 • Mixx
 • Google Bookmarks
 • Blogplay
Ratings: 1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading ... Loading ...
Share and Enjoy:
 • Print
 • Digg
 • Sphinn
 • del.icio.us
 • Facebook
 • Mixx
 • Google Bookmarks
 • Blogplay

Leave a Reply

You must be logged in to post a comment.